search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை"

    • கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
    • செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும்

    கருங்கல் :

    கருங்கல் பேரூராட்சி 13-வது வார்டு பகுதி சபா கூட்டம் ஊற்றுமுகம் பகுதியில் நடைபெற்றது. பேரூராட்சி உறுப்பினர் பிறேம்சிங் தலைமை தாங்கினார். பகுதி தலைவர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஊற்றுமுகம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    மாங்கன்றுவிளை அய்யா கோயில் முதல் ஊற்றுமுகம் பாலம் வரை மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், மாமூட்டுகுளம் கரை கட்டி படித்துறை அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் சானல் கரைகட்டி சாலை அமைக்க வேண்டும், செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
    • மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

    தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

    தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

    இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.

    இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்துவிட்டு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    மேலும் அதே பகுதியில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரேசன் கடை இப்பகுதிக்கு வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் 15-வது மாநில மானிய திட்டத்தின் மூலம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.

    இப்பகுதியில் கட்டப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆன 2 கட்டிடங்களையும் செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மேலும் தர்மபுரம் பகுதியில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக புதிய கட்டிடத்தில் இருந்து தமிழக அரசின் இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் டி.ராஜி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மோகனவேல் தர்மபுரம் ராஜேந்திரன் தெய்வமணி தயாளன் அம்பிகாபதி மாவட்ட பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அத்திக்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை, வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், அத்தி கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், நாடக மேடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், காரணி கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் புரிசை எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவர்கள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு, வேடக்கொல்லைமேடு, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு உள்பட பல்வேறு கிராமங்களில் நேற்று கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வருகைதந்து மக்கள் குறை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    குப்பம் கிராமத்தில் அரசு மேநிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    வாழியூர் ஊராட்சியில், ரூ.14.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கிடங்கு, காளசமுத்திரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், பள்ளக்கொல்லை புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வாழியூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவெங்கடேசன், படவேடு தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படவேடு கோட்டக்கரையில் கன்று விடும் திருவிழாவையும் எம்.எல்.ஏ. சரவணன் துவக்கி வைத்தார்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள வேடக்கொல்லைமேடு அரசு மேநிலைப்பள்ளியில் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர், மாணவ மாணவிகள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    டெல்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் கைலாஷ் சௌத்திரி, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து,மகளிர் அணி தலைவி ராஜரீகா, கோவை மாவட்ட பொருளாளர் மகாலிங்கம்,அதிமுக., திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இது குறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்னை விவசாயிகள் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் இருக்கின்ற தண்ணீரை கொண்டு தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அதனால் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அதே சமயம் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள கேரளாவில் தேங்காய் எண்ணெய் வீட்டு சமையல், நொருக்கு தீனி உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

    நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மட்டும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.

    மேகதாது நதியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பனை கட்ட திட்டமிட்டுள்ளதை தடுக்க வேண்டும் என்றதற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் காவேரி நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் ஆணையிட மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், திருப்பூர்மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யாறு ஒன்றியம் விண்ணவாடி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை ஆகியன அமைக்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல அரும்பருத்திக் கிராமத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடைக் கட்டடமும் கட்டப்பட்டது. இவைகளின் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமைத் தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றியக் கவுன்சிலர் வி.ஏ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு இரண்டு தார்சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    பின்னர் செய்யாறு கல்வி மாவட்டம் பள்ளி அரசு மேநிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும், நெடும்பிறை அரசு பயிலும் மாணவர்கள் 45 என மொத்தம் 108 பேருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் கே.மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், தீபா ராபர்ட், நகர மன்ற உறுப்பினர்கள் ரவி, பேபி ராணி பாபு, திமுக நிர்வாகிகள் அன்பழகன், மா.கி வெங்கடேசன், ஜே.ஜே. ஆறுமுகம், சுந்தரேசன், பார்த்தீபன் தயாளன், அருள், சக்திவேல், துரை, கருணாநிதி, பா.க. மணிவ ண்ணன், அசோக், மங்கலம் பாபு, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கலெக்டருக்கு பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராமசாமி–பட்டி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்பாடி பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 56) என்பவர் கடந்த 30 ஆண்டு–களுக்கும் மேலாக விற்பனை–யாளராக பணிபுரிந்து வரு–கிறார்.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனை–யாளருக் கும், மாவட்ட கூட்டுறவுத்து–றைக்கும் இடையே ஊதியம் வழங்குதல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை முழு–மையாக செயல்படுத்தாதது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    மேலும் ரேசன்கடை விற்பனையாளர் ராமசாமி இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள் ளார். நீதிமன்ற உத்தரவை மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை என கூறி மீண்டும் ராமசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் மோதல் உச்சக்கட் டத்தை எட்டியது.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனையாளரான ராமசாமி கடந்த 7-ந்தேதி விடுப்பு எடுத்த நிலையில், ராமசாமிபட்டி ரேசன் கடைக்கு குழுவாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டு–றவுத்துறை துணை பதிவா–ளர் தலைமையிலான சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிகா–ரிகள் ரேசன் கடையை திடீ–ரென மூடி சீல் வைத்த–னர்.

    மேலும் இந்த நடவடிக் கையின்போது திருச்சுழி வட்ட வழங்கல் அதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்காதது, போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்ட–தாக கூறப்படுகிறது. ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    இந்த நிலை யில் நேற்று முன்தினம் (8-ந்தேதி) காலை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடைக்கு வந்தபோது ரேசன் கடை பூட்டப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர். அதன்பின்னரே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததை அறிந்தனர். இத–னால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடி–யாமல் அவதிப்பட்ட–னர்.

    மேலும் ரேசன் கடையை திறக்கக்கோரி கடை முன்பு 50-க்கும் மேற்பட்ட பொது–மக்கள் கூட்டமாக திரண்ட நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூட்டுறவுத்துறை அதி–காரிகள் ரேசன்கடையை உடனடியாக திறந்து விட்ட–னர். இதனையடுத்து பொது–மக்கள் அனைவரும் ரேசன் பொருட்களை வாங்கி சென்றனர்.

    மேலும் இரு தரப்பு பிரச்சனையில் பொதுமக் கள் பயன்படுத்தி வரும் ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக் கைகள் எடுக்கவெண்டு–மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 நாட்களில் வாங்காதவர்களுக்கு ரேசன் கடைகளில் கொடுக்க முடிவு.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டில் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கும் வகையில் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வழியாக மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 கட்டமாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வேளை விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படலாம்.

    24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்திற்கு சென்று சமர்பிக்க வேண்டும்.

    படிவங்களை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு முகாம்களில் உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணி வரை நடந்தது.

    தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2¼ கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    மேலும் ஆண்டிற்கு 2.5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் இது தவிர ஏற்கனவே பிற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவி தொகை பெறுபவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இன்று 2-வது நாளாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. நாளைக்குள் 90 சதவீதம் பேருக்கு படிவங்கள் சென்றடையும் வகையில் ஊழியர்கள் முனைப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    படிவம் பெற முடியாமல், விடுபட்டு போனால் கூட பயப்பட தேவையில்லை. ரேசன் கார்டை நியாய விலை கடைகளுக்கு நேரில் கொண்டு சென்றால் கூட படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் படிவங்களை வழங்கி, பெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1.5 லட்சம் பேருக்கு நேற்று படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூறப்பட்டது.

    கோபி:

    தமிழக அரசு பொறு ப்பேற்றதும் மகளிருக்கான மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க ப்போவதாக அறிவித்தது. இந்த உரிமைத்தொகையை ரேசன் கடை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த படிவங்கள் உரிய முறையில் உண்மையான பயனாளி களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடை பணியா ளர்களுக்கும் இது தொட ர்பாக ஆலோசனையும், பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கோபி கோட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், சத்திய மங்கலம், தாளவாடி, அந்தி யூர் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் 670 ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப திவாளர் ராஜ்குமார் தலைமையில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி வகுப்பில் பொது விநியோக திட்ட பதிவாளர் கந்தசாமி, கூட்டு றவு சார்பதிவாளரும், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனருமான சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில், கோபி, அந்தியூர், நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி ஆகிய 6 தாலுகாவில் உள்ள 680 ரேசன் கடைகளில் பணியாற்றும் 468 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் படிவங்களை வழங்குதல், நாள் தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் 160 பேருக்கு மட்டும் படிவம் வழங்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூற ப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் தாசில்தார் கார்த்திக், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×